விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
    இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
    நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குடந்தை மேவி கிடந்த நம்பி – திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும்
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி – வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும்
எங்கள் நம்பி – எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும்
எறிஞர் அரண் அழிய – சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக
கடியார் இலங்கை கடந்த நம்பி – கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும்

விளக்க உரை

ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர்ப் பிரஸ்தாவமே இல்லையாயினும், மேல் திருநாமப்பாட்டில் “நறையூர் நெடுமாலை நாவிற்பரவி நெஞ்சிற்கொண்டு நம்பி நாமத்தை” என்று தலைக்கட்டுவதால் இப்பாசுரங்க ளெல்லாவற்றுக்கும் திருநறையூர் இலக்கு என்பது விளங்கும்.

English Translation

Our Lord is the Lord who reclines in kudangai, the Lord who lifted the Earth as a boar, the Lord who burnt the fortified Lanka city to dust, the Lord who measured the Earth in two strides. His Mantra is Na-ma Na-ra-ya-na-me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்