விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன் முத்தும் அரி உகிரும்*  புழைக் கை மா கரிக் கோடும்* 
    மின்னத் தண் திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்* 
    மின் ஒத்த நுண் மருங்குல்*  மெல்இயலைத்*  திரு மார்வில் 
    மன்ன தான் வைத்து உகந்தான்*  மலர் அடியே அடை நெஞ்சே!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின்ன – (மேற்கே) மின்னல் கண்டவாறே
பொன் – பொன்களையும்
முத்தும் – முத்துக்களையும்
அரி உகிரும் – சிங்கங்களின் நகங்களையும்
புழை கைமா கரி கோடும் – த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும்

விளக்க உரை

சிங்கங்கள் யானைகளோடே பொருது அவற்றின் கும்பஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்தமுத்துக்களையும் மலைகளிலுண்டான பொன்களையும் சிங்கநகங்களையும் யானைக்கொம்புகளையும் நீர்வாக்காலே கொணர்ந்துதள்ளிப் பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில் *அகலகில்லேனிறையுமென் றலர்மேல் மங்கையுறைமார்பன் வாழ்கின்றான்; அன்னவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே.

English Translation

O Heart! Gold, pearls, tiger's claws, ivory, all these are brought as gifts by the river karaveri in Tirunaralyur; the lord is pleased to keep his sweet companion, the lady Sri of lightning-thin waist, on his chest, Attain his flower-adored feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்