விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அகில் குறடும் சந்தனமும்*  அம் பொன்னும் அணி முத்தும்* 
    மிகக் கொணர்ந்து திரை உந்தும்*  வியன் பொன்னித் திருநறையூர்*
    பகல் கரந்த சுடர் ஆழிப்*  படையான் இவ் உலகு ஏழும்* 
    புகக் கரந்த திரு வயிற்றன்*  பொன்அடியே அடை நெஞ்சே !            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அகில் குறடும் – அகில் கட்டைகளையும்
சந்தனமும் – சந்தனக் கட்டைகளையும்
அம் பொன்னும் – அழகிய பொன்களையும்
அணி முத்தும் – அழகிய முத்துக்களையும்
திரை – அலைகளானவை
மிக கொணர்ந்து – மிகுதியாகத் திரட்டிக் கொண்டு வந்து

விளக்க உரை

அகிற்கட்டைகள் சந்தனக்கட்டைகள் பொன்கள் முத்துக்கள் முதலான சிறந்தபொருள்களை மிகுதியாகக் கொழித்துக்கொண்டு பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில், பண்டு பாரதப்போரில் (அர்ஜுந புத்ரனான) அபிமந்யுவைக்கொன்ற ஜயத்ரதனை அர்ஜுநனால் முடிப்பதற்கு உபாயமாக ஆழியால் இரவியை மறைத்தவனும், மற்றொருகால் பிரளயப் பெருங்கடல் கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான பெருமான் எழுந்தருளியுள்ளான்; அவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே. “பகற்கரந்த சுடராழிப் படையான்” என்றவிடத்து வியாக்கியான வாக்கியம் வருமாறு :– “நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜ : பதார்த்தத்தை மறைத்தானாய்த்து. ஆதித்யனுடைய தேஜஸ்ஸு கண்ணாலே முகக்கலாம்; திருவாழியாழ்வானுடைய தேஜஸ்ஸு கண்கொண்டு முகக்கவொண்ணாதபடி யிருக்கையாலே இருண்டுகாட்டிற்றாய்த்து.” என்று.

English Translation

O Heart! Logs of Agilwood, sandal-wood, nuggets of gold, and pearls in heaps come washed by the waves of the perennial river kaveri in Tirunaraiyur. The Lord who wields a discus that hid the sun in the Bharata war, himself hid the Unvierse in his stomach. Attain his golden feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்