விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
    நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்
    கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
    பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வம்பு அவிழ் தார் – பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய்
கல் நவிலும் தோளான் – மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான
கலியன் – திருமங்கையாழ்வார்
ஒலி – அருளிச்செய்த இத்திரு மொழியை
வல்லார் – ஓதவல்லவர்கள்

விளக்க உரை

உரை:1

மன்னு மதுரை – பகவத் ஸம்பந்தம் ஒருநாளும் மாறாமல் நித்யமாயிருக்கப்பெற்ற மதுரை என்றபடி; முதலில் ஸ்ரீவாமநமூர்த்தி நெடுநாளளவும் தவம்புரிந்த ஸித்தாச்ரமமாயிருந்தும், பிறகு ஸ்ரீசத்ருக்நாழ்வான் பிரதிபக்ஷ நிரஸநம் பண்ணி அரசாட்சிபுரிந்த இடமாயிருந்தும், பின்பு ஸ்ரீக்ருஷணபகவான் திருவவதரித்த விடமாயும் ஆக விப்படி பகவத்ஸம்பந்தம் இடையறாது அநுவர்த்திக்கப்பெற்ற ஊர். புத்தேளிர் – தேவதைகள் என்றபடி. திருவாசசிரியத்தில் “நான் முகம் புத்தேள்” என்ற நம்மாழ்வார்பிரயோகமுங்காண்க. நித்யஸூரிகளால் கொண்டாடப்படுவர்களென்றபடி.

உரை:2

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

 

English Translation

This garland of Tamil songs by bee-humming garland-wearing strong-armed kaliyan extols the Lord of Mathura, Vasudev's bright child, who resides in Naraiyur. Those who master it will become Gurus to the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்