விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
    விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*
    மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
    நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கட்டு ஏறு நீள் சோலை – காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான
காண்டவத்தை தீ மூட்டி விட்டானை – காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும்
மெய்யம் அமர்ந்த பெருமானை – திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும்
மட்டு ஏறு கற்பகத்தை – தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை
மாதர்க்கு ஆய் – (ஸத்யபாமைப்) பிராட்டிக்கா

விளக்க உரை

காண்டவ வனமென்பது தேவேந்திரனுக்கு உரியதாய்ப் பூலோகத்திலிருந்த தொரு காடு. ஒருநாள் அக்நிபகவான் ஒரு அந்தணவேடம் பூண்டு அர்ஜுநனும் கண்ணபிரானும் கூடியிருக்குமிடத்திலே வந்துசேர, அவ்வந்தணனைக் கிருஷ்ணார்ஜுநர்கள் நன்கு உபசரிக்க, அவன் உணவுவேண்ட, ‘வேண்டிய உணவையளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதிமொழிகூற, உடனே அவ்வந்தணன் தான் இன்னானென்று உண்மைதெரிவித்துக் காண்டவ வனத்தைத் தனக்கு இரையாக அளிக்குமாறுவேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்டமிருகங்களும் நிரம்பியிருக்கு மிந்தக்காடு அழிந்தொழிவது மிக நன்றே’ என்று நிச்சயித்து அக்நிபகவானை நோக்கி ‘அங்ஙனமே உண்பாயாக’ என்று அநுமதி தந்ததின்பேரில் அக்நி அக்காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ணத்ருப்தியாக உண்டனன் என்ற கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

English Translation

The Lord who set fire to the Kandava forest and resides in Meyyam is a nectar-dripping kalpaka tree. He built the beautiful Dvaraka for safyabhama. I have seen him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்