விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
    மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 
    தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
    நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூ வாய புள் ஊர்ந்து – பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு
துறை வந்து – வந்து சேர்ந்து
வேழம் மூவாமை நல்கி – ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து
முதலை துணித்தானை – முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும்
தேவாதி தேவனை – நித்யஸூரிகளுக்குத் தலைவனும்

விளக்க உரை

(துஸவாய புள்) ‘தூ வாய’ என்றும், ‘தூ ஆய’ என்றும் பிரிக்கலாம். தூ ஆய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனான என்றபடி.

English Translation

The Lord came leading his garuda bird to the lake, rescued the elephant Gajendra, by slicing the crocodile with his discus. He is the Lord of gods, red-eyed senkanmal. I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்