விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
    தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*
    தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
    நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய் – கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி
மாவலி – மஹாபலி பக்கலில்
மண்தான் கொண்டு – பூமியைத் தான் யாசித்துப்பெற்று
தாளால் அளந்த – திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட
பெருமானை – பெருமை பொருந்தியவனும்

விளக்க உரை

நான் சென்று நாடி = எம்பெருமான் என்னைப் பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித்திரிந்தான்; அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்; இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே காணவேண்டாமல், விடாய்த்த விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

English Translation

The Lord wore a deerskin on his chest and went to Mabali as a manikin seeking a gift of land, then took the whole Earth. He is the resident of nectar-groved Tiruvenkatam, searching for him everywhere I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்