விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி*  கூந்தல் முடிக்க பாரதத்து* 
    கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க*  சங்கம் வாய் வைத்தான்*
    செந்தாமரைமேல் அயனோடு*  சிவனும் அனைய பெருமையோர்* 
    நந்தா வண் கை மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பந்து ஆர் விரலாள் - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான
பாஞ்சாலி - த்ரௌபதியானவள்
கூந்தல் முடிக்க - குழல் முடித்துக் கொள்வதற்காக,
பாரதத்து - பாரதப்போரில்
கந்து ஆர் களிறு - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும்

விளக்க உரை

ஸ்ரீ வசநபூஷணத்தில் – “பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது – த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக. அர்ஜுநனக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.” என்றருளிச்செய்துள்ள ஸூத்ரங்கள் இங்கே அறியத்தக்கன. (த்ரௌபதியைத் துரியோதநாதிகள் மஹாஸபையில் துகிலுரிந்து அவமானப்டுத்தியதைப் பாண்டவர்கள் கண்டிருக்கச் செய்தேயும் சூதிலே தோற்றமையை நினைத்துப் பொறுத்திருந்தாலும் “சங்கசக்ர கதாபாணே! த்வாரகாநிலயாச்யுத! – கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதாம்” என்று அவள் கண்ணபிரானைச் சரணமடைந்த பின்பு பரிபவிக்கிறவளவில் ‘எம்பெருமானடியார்களைப் பிறர் பரிபவப் படுத்தக்ண்டால் சக்தியுள்ளவனாகில விலக்கவேணும்; சக்தியற்றவனாகில் வருத்தத்துடனே கண்மறையப் போகவேணும்’ எனகிற விசேஷசாஸ்த்ரமர்யாதையை நோக்கியாவது, (அல்லது) தங்களிடத்தில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்குள்ள ஸ்நேஹபக்ஷபாதங்களை நினைத்து அவனைச் சரணமடைந்தவள் பரிபவப்படுத்தக்கண்டால் சக்தியுள்ளவனாகில் விலக்கவேணும்;

English Translation

The Lord who blew his conch in the battlefield and terrified the elephant-mounted warrior kings in the Bharata war, and made the ball-clasping Panchail gather her hair once again, resides in Narayiur where benevolent Vedic seers rival the lotus-seated Brahma and Siva in their glories.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்