விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முனி ஆய் வந்து மூவெழுகால்*  முடி சேர் மன்னர் உடல் துணிய* 
    தனி வாய் மழுவின் படை ஆண்ட*  தார் ஆர் தோளான் வார் புறவில்*
    பனி சேர் முல்லை பல் அரும்ப*  பானல் ஒருபால் கண் காட்ட* 
    நனி சேர் கமலம் முகங்காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முனி ஆய் வந்து - பரசுராம முனியாய்த் திருவவதரித்து
மூவெழுகால் - இருபத்தொரு தலைமுறையளவும்
முடி சேர்மன்னர் உடல் துணிய - முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக
தனி வாய் மழுவின்படை ஆண்ட - ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும்
தார் ஆர் தோளான் - மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,-

விளக்க உரை

ஈற்றடியின முற்பகுதி “நனிசேர் வயலுள் முத்தலைக்கும்” என்றும் ஓதப்பட்டுவந்ததென்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தினால் வளங்குகின்றது. அப்பாடமே முதன்மையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது

English Translation

Lord of Naraiyur came then as the sharp axe-wielding Bhrigu Rama, Vanquished twentyone mighty kings, wore a Tulasi wreath on crown Fragrant Mullai flashing a smile, Panal flowers do beckon with them, Glory-lotus shows a face, in happy groves and fields everywhere

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்