விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
    தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*
    வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
    நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆளும் பணியும் கொண்டான் - சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும்
விண்ட நிசாசரரை - பிரதிகூலரான ராக்ஷஸர்களின்
தோளும் தலையும் துணிவு எய்த - தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக
சுடு வெம் சிலை வாய் - மிகக்கடூரமான வில்லில் நின்றும்
சரம் - அம்புகளை

விளக்க உரை

(அடியேனை அருளும் பணியுங் கொண்டான்) ஆட்கொள்ளுகையாவதென்? பணிகொள்ளுகையாவதென்? என்னில்; ‘இவன் நமக்கு உரியவன்’ என்னும்படி சேஷத்வத்திலே நிறுத்துகை ஆட்கொள்ளுகையாம்; சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகை பணிகொள்ளுகையாம்; அடியேனுக்கு சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டையும் தந்தருளினவன் என்றதாயிற்று. ‘நான் எனக்கே உரியவன்; பிறர்காலில் தலையை மடுக்கமாட்டேன்’ என்று மார்பு நெறித்திருந்த நிலைமையைப் போக்கியும் இளையபெருமாளைப் போலே எல்லாவகையான கைங்கரியங்களையும் செய்வேனாம்படிதிருத்தியும் வாழ்வித்தவனென்கை. இப்படிப்பட்ட சேஷத்வ பாரதந்திரியங்களுக்கு இசையாதவர்களிடத்திலே நடத்தும் சிக்ஷையைச் சொல்லுகிறது விண்டநிசாசரரை என்று தொடங்கி. விண்ட பொருந்திவாராமல் எதிரம்புகோத்த என்றபடி. அப்படிப்பட்டநிசாசரரை (அரக்கரை) தோளுந்தலையும் துணிவெய்த்தச்சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான். விசித்ரா தேஹஸம்பத்திரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ரதா ப்ரஹ்மந்! ஹஸ்தபாதாதிஸம்யுதா” என்கிறபடியே நம்மை வழிபடுவதற்கென்றே கொடுத்தகரசரணாதி அவயங்கள் இவர்கட்கு அக்காரியத்தில் உபயோகப்படுகின்றிலவாகில் இவர்கட்கு இவை எதுக்கு? என்று தோள் தலை முதலிய உறுப்புகளை யொழித்தானாயிற்று.

English Translation

The Lord of Naraiyur made me his and took me into his service. He did crop many heads and arms with his bow and arrow fire. His streets are filled with beautiful people looking like Manmatha. Daily festival sounds abound, all the year round, never ceasing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்