விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
    பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
    பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
    தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தார் ஆவன் - மாலையணிந்துள்ளவனும்
தண் அரங்கம் ஆவன் - குளிர்ந்த திருவரங்கமாநகரை ஆள்பவனும்
பூமேல் தனி ஆளன் - தாமரைப்பூவிற் பிறந்து ஒப்பற்றவளான பிராட்டியை ஆள்பவனும்
முனீயாளர் ஏத்த நின்ற பேர் ஆளன் - மஹர்ஷிகள் துதிக்குப்படியாயுள்ள பெருமைவாய்ந்தவனும்
ஆயிரம் பேர் உடைய ஆளன் - ஸஹஸ்ரநாமங்களை வாசகமாகக் கொண்ட ஸ்வாமியும்

விளக்க உரை

‘உபயவிபூதியையும் நானே ரக்ஷிக்கக்கடவேன்’ என்று தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பவனும் ஜகத்ரக்ஷணத்திற்காகத் திருவரங்கம் பெரியகோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளவனும் தாமரைப்பூவை யிருப்பிடமாகவுடைய அத்விதீயையான பிராட்டிக்கு வல்லபனும் ப்ரஹ்மபாவநையையே தலைக்கொண்டிருக்கிற ஸநகாதி மஹர்ஷிகள் துதிக்கும் பெருமையையுடையவனும், அநுபவிப்பார்க்கு இழிந்தவிடமெங்கும் துறையாம்படி ஆயிரந் திருநாமங்களையுடையவனம் நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனுமான பெருமானுடைய பெருமைகளை அநுபவிக்க வேண்டில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். அத்திருப்பதிக்கு அபிமாநியான சோழனுடைய வீரம் சொல்லுவது மூன்றாமடி. கீழ் மூன்று நான்காம் பாசுரங்களில் வெண்ணி யென்னுமிடத்தில் வந்தெதிர்ந்த அரசர்களை வென்ற வீரம் சொல்லிற்று; தேரழுந்தூரில் வந்தெதிர்ந்த மன்னரைவென்ற வீரம்சொல்லுகிறது இப்பாட்டில்.

English Translation

Devotees! If you wish to hear the praise of the Lord, -who wears a Tulsai-garland, resides in Arangam, is the spouse of lotus-dame Lakshmi, is praised by Rishis, has a thousand names, is the bridegroom of Nappinnai, -go the Tirunaraiyur Manimadam where the chola king, -who shreded the bodies of Sundry kings in the bottle at Alundur riding his horse-drawn chariot, -offers worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்