விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேய்ச்சி - பூதனையானவள்
துஞ்ச - மாளும்படியாக
தடமுலை - (அவளது) பருத்த முலையிலுள்ள
நஞ்சு உண்டு - விஷத்தை உட்கொண்டவனும்,
முது துவரை - பிராசீனமான துவாரகைக்கு

விளக்க உரை

மலைத்ததாழிவரைகளில் உண்டான ரத்னங்களைக்கொண்டு வந்து பூமியிலுள்ளாரெல்லாரும் உபஜீவிக்குமாறு ஆங்காங்குக் கொழிக்கின்ற காவிரியாறு பெருக்ப்பெற்ற நாட்டுக்குத் தலைவனாய்ப் பெரிய ஆண்பிள்ளையான சோழராஜன் பணிவிடை செய்யப்பெற்ற கோயிலேன்க.

English Translation

Devotees! if you wish to attain the feet of the Lord who sucked the poison breast of the ogress and killed her, who went about grazing cows. played a flute and took the bangles of cowherd, dames, then reigned as king of the ancient Dvaraka city, -go to the temple of Tirunaraiyur Manimadam where the bow-wielding chola, king of the gem-washing Kaveri watered tract offers worship

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்