விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*  தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்* 
    தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்* 
    மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட* 
    தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன்னாலே - ஸ்வேச்கையாலே
தன் உருவம் - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
பயந்த - உண்நுபண்ணிக்கொண்ட
தான் ஆய் - திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய்
நயங்கு ஒளி சேர் மூஉலகும் தான் ஆய் - மிக்க வொளியையுடைய மூவுலங்களையும் தான் என்கிறசொல்லுக்குள்ளே அடக்கிக் கொண்டவனாய்

விளக்க உரை

தன்னுருவம் தன்னாலே பயந்த தானாய் எம்பெருமான் தவிர மற்றையோருடைய ஸ்வரூபமெல்லாம் எம்பெருமானுயை இச்சைக்கு உட்பட்டதாயிருப்பதுபோல, எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்கள் வேறொருவருடைய இச்சைக்கு உட்பட்டதாயிருக்குமோ வென்னில், இரா; தன்னுடைய ஸ்வரூபஸ்திதி முதலியவை தானிட்ட வழக்காம்படியிருக்கும் அவனென்னவுமாம்; அகர்மவச்யன் என்றவாறு. “தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்” என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும், ‘வானாய்‘ என்றதனால் நித்யவிபூதியைத் தானிட்ட வழக்காகவுடையன் என்பதும் சொல்லிற்றாம். தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தன்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஸ்வரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக்கொண்டவன்; தானான நிலைமையிலே நின்று ஸம்ரக்ஷித்தும் ப்ரஹ்மருத்ரர்களுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களை நடத்தியும் ஆகவிப்படி மூன்று வடிவுகளை யுடையவனென்றபடி.

English Translation

Devotees! The Lord who is self-made, who made the three radiant worlds, who is the Lord of Valikunta, who himself became the Tri-murti, then also became a cowherd, resides in Tirunarayiur Manimadam, where the spear-wielding chola king Kongan offers worship. Attain him there.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்