விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலங்க முந்நீர் கடைந்து*  அமுதம் கொண்டு*  இமையோர் 
    துளங்கல் தீர*  நல்கு சோதிச் சுடர் ஆய*
    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்*  உடையான் ஊர்*
    நலம் கொள் வாய்மை*  அந்தணர் வாழும் நறையூரே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முந்நீர் - ஸமுத்ரத்தை
கலங்க - கலங்கும்படியாக
கடைந்து - கடைந்து
அமுதம் கொண்டு - (அதில் நின்று அமுதமெடுத்து
இமையோர் துளங்கல் தீர நல்கு - aதேவர்களின் கலக்கம் தீரும்படியாக (அவர்களுக்குக்) கொடுத்தருளியவனும்

விளக்க உரை

‘கடல் நம்முடைய படுக்கையாயிற்றே, அதற்கொரு கலக்கம் விளைக்கலாமோ?’ என்றும் நினையாமல், தன்னையடுத்தவர்கட்குக் காரியஞ்செய்வதிற் கண்வைத்துத் தனது பள்ளியான கடலைக் கலக்கியும் கடைந்து அமுதமளிதானென்ற மஹாகுணம் விளங்க ‘முந்நீர் கலங்கக் கடைந்து’ எனப்பட்டது. நல்குசோதிச்சுடராய = தேவர்கட்கு அமுதமளித்ததனால் எம்பெருமானுக்குத் திருமேனியில் புகர்விஞ்சிற்றுப்போலும்; அன்பர்கள் துயர் திருப்பெற்றால் அதுவேயிறே ஸ்வாமிக்குப் பொலிவு. நலங்கொள்வாய்மையந்தணர் = ‘ஸத்யமே சொல்லவேணும்’ என்பது சாஸ்த்ரவிதியாயினும், பிறர்க்கத் துன்பம் விளைவிக்குமதான ஸத்யத்தைச் சொல்லக் கூடாதென்பதும் நூற்கொள்கையாதலால் அப்படி தீமையாகத் தலைக்காட்டாமல் நன்மையாகவே தலைக்காட்டுமதான ஸத்யத்தையே சொல்லுமவர்களாம் திருநறையூர் அந்தணர்கள். “ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூ யாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” என்றது காண்க. இனி “நலங்கொள்வாய்மை” என்று உண்மையுரையான வேதத்தைச் சொன்னபடியாய், வேதம்வல்ல அந்தணர் வாழுமிடம் திருநறையூர் என்றுரைத்தலுமொன்று.

English Translation

The Lord with a radiant conch and discus churned the ocean in the yore and gave it to the gods for their protection. He resides, in Naraiyur where resident Vedic seers chant and perform sacrifices.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்