விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறை சேர் நுதலார்*  பேணுதல் நம்மை இலாதமுன்* 
    நறை சேர் பொழில் சூழ்*  நறையூர் தொழு நெஞ்சமே! என்ற*
    கறை ஆர் நெடு வேல் மங்கையர்கோன்*  கலிகன்றி சொல்* 
    மறவாது உரைப்பவர்*  வானவர்க்கு இன் அரசு ஆவரே.   (2)         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறை சேர் நுதலார் - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள்
நம்மை - நம் விஷயத்தில்
பேணுதல் இலாத முன் - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே,
நெஞ்சமே - ‘ஓ மனமே!
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’  என்று உபதேசித்தவரும்.

விளக்க உரை

கறையார் நெடுவேல் பகவத்பாகவதவிரோதிகளை நிரஸநம் பண்ணின ரத்தக்கறை கழுவுவதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம் திருமங்கையாழ்வாருடைய வேல்.

English Translation

O Heart! "Before crescent-eyebrowed dames laugh, let us offer worship to the Lord-of-groves-Naraiyur", -these songs are by spear wielding Mangai king Kaliyan. Those who master it will rule the world of celestials forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்