விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணும் சுழன்று பீளையோடு*  ஈளை வந்து ஏங்கினால்* 
    பண் இன் மொழியார்*  பைய நடமின் என்னாதமுன்*
    விண்ணும் மலையும்*  வேதமும் வேள்வியும் ஆயினான்* 
    நண்ணும் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பீளையோடு - பிளிச்சையோடு கூட
கண்ணம் சுழன்று - கண்கள் சுழலமிட்டு
ஈளை வந்து - கோழைமேலிட்டு
ஏங்கினால் - தளர்ச்சியடைந்தால், (அப்போது)
பண் இன் மொழியார் - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி)

விளக்க உரை

யௌவன பருவத்தில் இஷ்டப்படி விஷயபோகங்கள் செய்யவேண்டிய தென்றும், அப்படி விஷயபோகஞ் செய்வதற்குச் சக்தியில்லாமல் உடல் தளர்ந்த காலத்திலே பகவத் பக்தி மிக்கு திவ்யதேசங்களிலே போதுபோக்கவேண்டியதென்றும் பலர் கருதியிருப்பதுண்டு; யௌவனபருத்தில் விஷயபோகங்கள் செய்பவர் ஒரு நியதியில்லாமல் கண்டவிடங்களிலும் தட்டித்திரிவர்கள்; சரீரத்திற்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வளவும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு தடியைப் பற்றிக்கொண்டு முதுகு கூனிட்டு நடக்கும் நிலைமை நேர்ந்தவிடத்தும் நப்பாசை கழியாமையாலே பூர்வவாஸ நையேகொண்டு வேசிகளின் வீட்டு வாசலையே பற்றிக் கிடக்கும் படியாகும்; அவர்கள் இவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் அவர்களது முகத்தைப் பார்ப்பதும் முறுவலை யெதிர்பார்ப்பதுமா யிருப்பர்களேயன்றி அவ்வளவிலுங்கூட விரக்தி பிறவாது; திவ்யதேசங்களில் ஈடுபாடும் உண்டாகாது; ஆகையால் விஷயாந்தரங்களில் கைவைப்பதும் ஒருநாளும் க்ஷேமப்படுவதற்கு உறுப்பாகமாட்டாது; இப்போதே திருநறையூரைத் தொழுது நன்று என்கிறார். கிளரொளியிளமை கெடுவதன் முன்னமே இது செய்யத் தக்கதென்கை.

English Translation

O Heart! Before eyes begin to roll, cough throws up phelgm and sweet dames call, "Go carefully, Father!", let us go to the lord who became the mountain, the sky, the Vedas, the sacrifices –he resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்