விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முளிந்தீந்த வெம் கடத்து*  மூரிப் பெருங் களிற்றால்* 
    விளிந்தீந்த மா மரம்போல்*  வீழ்ந்தாரை நினையாதே* 
    அளிந்து ஓர்ந்த சிந்தை*  நின்பால் அடியேற்கு*  வான் உலகம் 
    தெளிந்தே என்று எய்துவது?*  திருவிண்ணகரானே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முளிந்து தீந்த - உலர்ந்து தீஞ்சுபோன
வெம் கடத்து - வெவ்விய பாலைநிலத்திலே
மூரிப் பெருங்களிற்றால் - வலிய பெரிய யானையினால்
விளிந்து - தள்ளப்பட்டு
தீந்து - கெட்டுப்போன

விளக்க உரை

தீக்ஷணமான மருகாந்தாரத்திலே வலிதான ஒரு யானையாலே தள்ளப்பட்டு உருமாய்ந்துபோகிற பெரிய மரங்கள் போலே இவ்வுலகில் எத்தனையோ பலசாலிகள் கருமங்களாலே முடிக்கப்பட்டு முடிந்து போகிறார்களாதலால் இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தை ஒரு பொருளாக மதியாமல் பரம தயாளுவான தேவரீர் பக்கலிலே நெஞ்சைச் செலுத்தியிருக்கும் அடியேனக்குப் பரமபதம் கிடைக்கும் நாள் எதுவோ அந்நாளை யருளிச் செய்யவேணும் திருவிண்ணகரப்பனே! – என்கிறார். முளிந்து + தீந்த, முளிந்தீந்த; விளிந்த + தீந்த, விளிந்தீந்த. (சங்கு + கதை, சங்கதை என்றாவது போல.) வெம் கடம் – கடூரமான பாலைநிலம். ஸம்ஸாரமே முள்நிதீந்த வெங்கடமாகவும், கருமங்களே மூரி்ப்பெருங்களிறாகவும், மாண்டொழிந்த அரசர்கள் விளிந்தீந்த மாமரமாகவும் கொள்க.

English Translation

O Lord of Tiruvinnagar! I Like a mighty elephant pushing a dead long in a once dense forest destroyed by fire, do not brush me aside. I have come to you with clear thought and a loving heart. When will you grant me the sky-world?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்