விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேறே கூறுவது உண்டு*  அடியேன் விரித்து உரைக்கும் 
    ஆறே*  நீ பணியாது அடை*  நின் திருமனத்து* 
    கூறேன் நெஞ்சு தன்னால்*  குணம் கொண்டு*  மற்று ஓர் தெய்வம் 
    தேறேன் உன்னை அல்லால்*  திருவிண்ணகரானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேறே - விலக்ஷணமாக
கூறுவது உண்டு - விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு;
விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது - (நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல்
நின் திருமனத்து - உன் திருவுள்ளத்தில்
அடை - ஸாரமாகக் கொண்டருள வேணும்;

விளக்க உரை

அடியேன் வேறே கூறுவதுண்டு = தோற்றினபடி கும்பலில் சொல்லுகிற வார்த்தை போலல்லாமல் இவ்வார்த்தையை ரஹஸ்யமாய் மிக முக்கியமாக விண்ணப்பஞ்செய்கிறேனென்றபடி. விரித்துரைக்குமாறே பணியாது = தேவரீர்க்கும் அடியேனுக்கும் நடக்கிற ஸம்வாதம் கீதா சாஸ்த்ரம் போலே விரிந்திருக்கவொண்ணாது; அதாவது – கீதையிலே முடிவாக அருளிச்செய்த சரமச்லோகத்தை முதலிலேயே அருளிச்செய்திருந்தால் அவ்வளவு நூல்விரிவு விளைந்திராது; தேவரீர் ஒன்று சொல்ல, அதற்கு அர்ஜுநன் கலங்கிப் பல கேள்விகள் கேட்க, அவற்றுக்கு தேவரீர் உத்தரமருளிச் செய்ய, அதற்குமேலும் பலபல சங்கைகள் தோன்றி அர்ஜுநன் கேள்விகள் கேட்க, இப்படியே கீதா சாஸ்த்ரம் விரிந்ததாயிற்று; அப்படியல்லாமல் இப்போது தேவரீர் ஸாரமாகத் திருவுள்ளம் பற்றவேணும்; அதற்குமேல் அடியேன் ஒன்றும் வாய்திறக்கும்படி யிருக்கவொண்ணாது; “ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ” (சஞ்சலமற்று நிலைபெற்றேன், ஸந்தேகங்கள் தீர்ந்தேன், தேவரீர் சொன்னபடியே செய்கிறேன்) என்று கையெழுத்திடும்படி அருளிச்செய்யவேணுமென்கை. ‘ஆழ்வீர்! உம்மைத் திருவடி சேர்த்துக்கொண்டேன்’ என்றருளிச் செய்யவேணுமென்பதை தேர்ந்த பொருள்.

English Translation

O Lord of Tiruvinnagar! Here is something I say do not make me dilate on it, but take it directly to your heart, I cannot praise any other god, nor even contemplate such praise.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்