விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் ஏய் நோக்கு நல்லார்*  மதிபோல் முகத்து உலவும்* 
    ஊன் ஏய் கண் வாளிக்கு*  உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
    கோனே! குறுங்குடியுள் குழகா!*  திருநறையூர்த் 
    தேனே*  வரு புனல் சூழ்*  திருவிண்ணகரானே      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறுங்குடியுள் குழகா - திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள
வரு புனல் சூழ் திரு விண்ணகரானே - பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
மான் ஏய் நோக்கு நல்லார் - மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது
மதி போல் முகத்து உலவும் - சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற

விளக்க உரை

பாம்புக்கு அஞ்சி ஓடிவந்து விழுந்தேனென்பாரைப் போலவும், ராமாஸ்த்ரத்துக்கு நடுங்கி வந்து விழுந்தேனென்பாரைப் போலவும் மாதர்களின் கண்களாகிற அம்புக்கு அஞ்சி வந்து நின்னடைந்தேனென்கிறார். ஸ்த்ரீகள் ஆண்கள் ஆகர்ஷித்துக்கொள்வது கடைக்கண்ணோக்கினாலாதலால் ‘மானேய் நோக்குநல்லார்’ என்றார். அவர்களைச் சிறப்பித்தும் அவர்களுடைய முகத்தை வர்ணித்தும் இவர் கூறுவது காமுகர்களின் ஸமாதியாலென்க. ஓட்டந்து ‘ஓட்டம் தந்து’ என்ற இரண்டு சொற்கள் ‘ஒட்டந்து’ என ஒரு சொல்லாயிற்று; சிதைவு; ஓடிவந்து என்றபடி. குழகன் மஹானாயிருக்கும் தனது மேன்மையைப் பாராமல் சிறியாரோடுங் கலந்துபழகுமவன் என்கை.

English Translation

O Lord of Tiruvinnagar! My Liege! Beautiful one of Tirukkurungdi! Honey of Tirunaraiyur! Hit by the arrow-looks of moon-faced dames, I have come running to your feet, wounded.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்