விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துறப்பேன் அல்லேன்*  இன்பம் துறவாது*  நின் உருவம் 
    மறப்பேன் அல்லேன்*  என்றும் மறவாது*  யான் உலகில்
    பிறப்பேன் ஆக எண்ணேன்*  பிறவாமை பெற்றது*  நின் 
    திறத்தேன் ஆதன்மையால்*  திருவிண்ணகரானே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பம் - (உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை
துறப்பேன் அல்லேன் - தவிரமாட்டேன்;
துறவாது - அவ்வின்பத்தைத்தவிராதவனாகி
என்றும் - ஒருநாளும்
நின் உருவம் மறப்பேன் அல்லேன் - உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்;

விளக்க உரை

சிற்றின்பங்களை நான் துறப்பேனேயன்றி, தேவரீருடைய அநுபவமாகிற பேரின்பத்தை ஒருநாளும் இழக்கமாட்டேன்; தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்கமுடியுமாகிலன்றோ இன்பத்தை நான் துறந்தவனாவேன்; வடிவழகை மறவாதவனாகையாலே இனபத்தைத் துறவாதவனாயினேன்; இப்படிப்பட்ட நான் இனிமேலும் இவ்விருள் தருமாஞாலத்தில் பிறந்து பிறந்து கஷ்டங்கள்பட நினைப்பேனோ? “மறந்தேனுன்னைமுன்னம்” என்று கீழ்நாட்களில் தேவரீரை மறந்திருந்தேனாகிலும் இனிமேலுள்ள காலம் மறவாதேயிருக்கப் பாரித்திருப்பவனாதலால் அடியேன் பிறவித்துயர்நீக்கி நித்யானந்த மநுபவிக்கவே உரியேனாயினேன் என்றாராயிற்று. கீழ்த்திருமொழியில் “மறந்தேனுன்னை முன்னம் – அதனாலிடும்பைக்குழியிற் பிறந்தே யெய்த்தொழிந்தேன்” என்று மறதிக்குப் பலனாகப் பிறவித்துன்பம் பெற்றமை சொன்னார்; இதில் மறவாமைக்குப் பிறவாமைபெற்றமை சொன்னாரென்க.

English Translation

O Lord of Tiruvinnagar! I have renounced all pleasures, always remembering your beautiful form. No more shall I be born on Earth. Freed of birth I have come to you, by your grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்