விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போது ஆர் தாமரையாள்*  புலவி குல வானவர்தம் 
    கோதா*  கோது இல் செங்கோல்*  குடை மன்னர் இடை நடந்த
    தூதாதூ*  மொழியாய் சுடர்போல்*  என் மனத்து இருந்த 
    வேதா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

போது ஆர் தாமரையாள் - நல்லபோதிலே அலர்ந்த தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான பிராட்டிக்கும்
புலவி - பூமிப்பிராட்டிக்கும்
குலம் வானவர்தம் - சிறந்த நித்யஸூரிகளுக்கும்
கோதா - விரும்பத்தகுந்தவனே!
கோது இல் செங்கோல் - தடையின்றிச் செங்கோல் செலுத்துமவராய்

விளக்க உரை

பிராட்டிமாரும் நித்யஸூரிகளும் புருஷகாரமாகச் சரணம்புகுகிறாரிதில். போதார் தாமரையாள் தன்கோதா!, புலவிதன்கோதா!, குலவானவர்தம் கோதா! என்று யோஜிக்கலாம். ‘கௌதுகம்’ என்னும் வடசொல் விகாரமடியாப் பிறந்த விளியாம் கோதா! என்பது. ‘ப்ரியனே’ என்றபடி. செவ்வித் தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு அன்பனே! பூமிப்பிராட்டிக்கு அன்பனே! நித்யஸூரிகட்கு அன்பனே! என்கை. பூமிப்பெயரான புலம் என்னும் சொல்லடியாயப் பிறந்த பெண்காற்பெயர் புலவி என்பது. அன்றியே, ‘புலவி’ என்று பிரிவுக்கும் பெயருண்டு; போதார் தாமரையாளுடைய புலவியில் – (பிராட்டியைப் பிரணயவசத்தால் பிரிந்திருக்குங் காலத்தில்) அப்பிரிவினாலுண்டான் ஊடலைத் தீர்த்துத்தேறுதல் செய்விக்கும் நித்யஸூரிகளுக்கு அன்பனே! என்னவுமாம்.

English Translation

O Lord reisiding in Tiruvinnagar! O Lord, sweet as ambrosia to lotus-dame Lakshmi, Earth Dame and devotees in the sky! O Soft spoken one, you walked as a messenger between crowned parasoled kings! You are the radiant Lamp of knowledge in my heart. I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்