விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல்லா ஐம்புலன்கள் அவை*  கண்டவாறு செய்யகில்லேன்* 
    மல்லா! மல் அமருள் மல்லர் மாள*  மல் அடர்த்த!*
    மல்லா மல்லல் அம் சீர்*  மதிள் நீர் இலங்கை அழித்த 
    வில்லா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல்லா - கல்விபயிரா (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத)
ஐம்புலன்கள் அவை - பஞ்சேந்திரியங்களானவை
கண்ட ஆறு - செய்ய நினைத்தவிதமாக
செய்யகில்லேன் - நான் செய்யமாட்டுகின்றிலேன்;
மல்லர் - வலிமையுள்ள பெருமானே!,

விளக்க உரை

விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந்! ஹஸ்த பாதாதிஸம்யுதா” என்று செவி வாய் கண் மூக்கு முதலிய கரணங்கள் உன்னுடைய திருப்புகழ்களைக் கேட்பது மொழிவது முதலிய கார்யங்களுக்காக ஏற்பட்டவை; அப்படிப்பட்ட அவை அவ்வழியில் நில்லாதே அல்வழியிற் செல்லுகின்றனவே பாவியேனுக்கு; அவை இழுத்துக்கொண்டு போகிறவழியே நான் செல்வதென்றால் இது என்னாலாகுமோ? “பூணாரமார்பனைப் புள்ளுறும் பொன்மலையைக் காணாதார் கண்ணென்றுங் கண்ணல்லகண்டாமே” என்றும், “தொண்டர்க்கினியானைக் கேளாச்செவிகள் செவியல்ல கேட்டாமே” என்றும் உறுதிகொண்டிருக்கிற நான் விஷயாந்த்ரங்களில் மண்டித்திரிகிற நெஞ்சை அநுசரித்து நடக்கவுரியவனோ? என்கிறார் முதலடியால். மற்போராவது ஆயுதங்களின் உதவியின்றியே தேஹ வலிமையையேகொண்டு நடத்தும் யுத்தம்.

English Translation

O Lord residing in Tiruvinnagar! No more can I work for the uncultivated ways of my senses. O strong wrestler who wrestled with the wrestlers! O Bow-wielder who destroyed the prosperous walled city of Lank I have come to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்