விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு*  பண்டை நம் வினை கெட என்று*  அடிமேல் 
    தொண்டரும் அமரரும் பணிய நின்று*  அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டரும் - (மற்றுமுள்ள) பக்தர்களும்
நம் பண்டை வினை கெட என்று - ‘நமது முன்னைத் தீவினைகளெல்லாம் தொலையவேணும்‘ என்று மநோரதித்து,
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு - வண்டுகள் மதுவுண்ணப் பெற்ற மணம் மிக்க பூக்களினாலாகிய மாலைகளை ஏந்திக்கொண்டு
அடிமேல் பணிய நின்று - திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும்படியாக நின்று
அங்கு - அப்போதே

விளக்க உரை

இவ்வுலகமெல்லாம் பிறர் வசப்பட்டிருக்கையில் தன் திருவடிகளைப் பரப்பி இலச்சினைபட நடந்து அவற்றை ஆட்படுத்திக்கொண்டது போலவே அடியேனையும் ஆட்படுத்திக்கொள்ளவேணும்; உனது ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் அடியேன் ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி அருள்புரியவேணும்; இவ்வளவே அடியேன்; இப்பாழும் ஸம்ஸாரத்தில் அடியேனுக்கு இனி வாழ்வுவேண்டா; திருவிண்ணகரிலே வந்து நித்ய ஸந்நிதி பண்ணியிருப்பது ஸபலமாகும்படி இத்தனை யருள் செய்யவேணும் என்றாராயிற்று.

English Translation

Bee-humming fresh flower garland in hand, Gods and devotees do offer worship, seeking their freedom from Karmic misery. Lord, who in yore came to measure the Earth! O Lord if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்