விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நறை செய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்* 
    உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்*  அவை அம் கை உடையானை*  ஒளி சேர் 
    கறை வளரும் வேல் வல்ல*  கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்* 
    முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்*  முழுது அகலுமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நறை செய் பொழில் மழை தவழும் - தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற
நந்திபுரவிண்ணகரம் - நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை
நண்ணி - அடைந்து
உறையும் - அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து
உறை கொள் புகர் ஆழி - உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும்

விளக்க உரை

“உறைகொள் புகராழி” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்யும் ஸ்ரீஸூக்திகாண்மின் :- “விரோதி நிரஸநத்துக்குத் திருமங்கையாழ்வார் கையில் வேலுண்டானபின்பு திருவாழி உறையிட்டிருக்குங்காண்” என்று. கறைவளரும் வேல்வல்லவனான கலியனே விரோதிகளை வென்று உலகத்தை யாள்கின்றமையால் எம்பெருமானுடைய திருவாழிப் படைக்குக் காரியமில்லையாக, உறையிலிடவேண்டிற்றாயிற்றென்க, ஆழ்வாருடைய வேல் அப்படி உறையில் கிடக்கமுடியாது; சத்ருநிரஸநம்பண்ணின கறை கழுவுதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம்

English Translation

This garland of ten songs, by sharp spear-wielder Kaliyan extol the Lord of discus and couch residing amid the fragrant groves of Nandipura Vinnagaram. Devotees who master it will be freed of terrible karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்