விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்*  நந்தன் மதலை* 
    எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ*  நின்ற நகர்தான்*
    மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்*  மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
    நந்தி பணிசெய்த நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தந்தை - தகப்பனாராகிய நந்தகோபருடைய
மனம் - மனத்தை
உந்து - சோரப்பண்ணுகின்ற
துயர் - துக்கமானது (புத்திரனில்லையேயென்கிற சோகம்)
நந்த - தொலையும்படி

விளக்க உரை

இத்திருப்பதியில் மந்தமான வாத்ய கோஷத்தைச் சோலையிலுள்ள மயில்கள் செவியுற்று, மேகங்கள் முழங்கின்றனவென் றெண்ணிச் சிறை விரித்தாடுகின்றனவாம். நந்திபணிசெய்த நகர் = திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரவிண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுய கரத்தில் வயிரமேகன் போலவும். திருநறையூரில் செங்கணான்கோச் சோழன் போலவும் இத்திருப்பதியில் நந்திவருமனென்னு மோரரசன் சில் திருப்பணிகள் செய்தனனாகச் சொல்லிப்போருவர்கள்.

English Translation

The Lord who was born in the darkness of the dungeon to rid his father's agaony and grew as Nandagopala's son, is worshipped by gods as their father, with fresh flowers everyday in Nandipura Vinnagaram. where the distant beat of the festival drum sounds like gathering monsoon clouds and peacocks begin to dance in the surrounding groves. The king Nandivarman offers worship here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்