விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என*  வந்த அசுரர்* 
    இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல*  நின்ற பெருமான்*
    சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*  அடிகொள் நெடு மா* 
    நறைசெய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறையின் ஒளி எயிறு இலகமுறுதி - பாலசந்திரன் போன்று ஒளிபெற்ற கோரைப் பற்கள் விளங்க மேலிட்டுவந்து
எதிர் பொருதும் என வந்த அசுரர் - எதிரிட்டுச் சண்டைபோடுவோ மென்று வந்த அஸுரர்களுடைய
இறைகள் அவை - சரீரங்களானவை
நெறு நெறு என - நெறுநெறு வென்று முறிந்தொழிய
வெறிய அவர் - வெறுங்கையரான அவ்வசுரர்கள்

விளக்க உரை

உரை:1

‘இறைகளவை’ என்பதற்கு – சரீரங்கள் என்று வியாக்யானத்தில் பொருளுரைக்கப்பட்டது; மண்டலபுருடனது நிகண்டில் - “இறை சிவன் கடன் வேந்தன் கையிறையிறுப்பிறை சிறந்தோள், சிறுமை புள்ளிறகு தங்கல், காபிமார்சென்னி கூனிறப் பிராறே” என்றதில் காண்கிற பன்னிரண்டு பொருள்களில் ‘தலை’ என்னும் பொருளும் இங்குக் கொள்ளக் கூடியதே. வெறிய அவர் = “(இராவணன் நடுங்கினான். வில்லையும் கைவிட்டான்) என்றாற்போலே ஆயுதங்களை யொழிந்தவர்கள் என்கை. ‘எறிய’ என்றும் பிரிக்கலாம். அசுரர்கள் இறைகளவை – அம்புகளை, நெறு நெறென எறிய + பிரயோகிக்க, (அதன் பிறகு) அவர்வயிறழல நின்றபெருமான் என்னவுமாம்.

உரை:2

பிறைச்சந்திரனை போன்ற பற்களை உடைய அரக்கர்கள், போரிட வந்தபோது ராமபிரான் அவர்கள் வயிறெரிய உடல்களை நெறுநெறு என்று முறித்து வீசினான். இப்பெருமாளின் நந்திபுர விண்ணகரில் சோலைகளில் பருத்த அடிகளை உடைய மரங்கள் உள்ளன. மயில்களும், குயில்களும் வாழும்; மேகங்கள் உலாவும்; பூக்கள் உதிரும்; வண்டுகள் ரீங்காரம் செய்யும், மனமே! இத்தலத்தை நீ அடைவாயாக என்கிறது பாசுரம்.

English Translation

Crushing the bodies of hefty glang-sized warning-while-teeth-faced Asuras, He makes them flee without rest or relifef from him, holding their big bellies burning with bruise. Peacocks and cockoos and flighty bumble bees are singing and dancing on tail mango trees. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்