விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
    மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 
    தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
    நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாசு அறு மனத்தினொடு - குற்றமற்ற மநஸ்ஸும்
உறக்கமொடு - உறக்கமும்
இறக்கை அவை ஆய - மரணமும் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
பெருமான் - பெருமை தங்கியவனும்
தாய் - தாயாகிய யசோதைப்பிராட்டி

விளக்க உரை

முதலடியில், நிலத்திற்குத் ‘தீதறு’ என்று விசேஷணமிட்டது – பூமியின் சிறப்பைக் காட்டினபடி. போகங்களையும் மோத்தையும் விளைத்துக் கொள்வதற்குப் பாங்காயிருத்தலாகிற சிறப்பு உண்டிறே பூமிக்கு. மூன்றாமடியில், செற செறுதலாவது கோபித்தல். ‘சிற’ என்னும் பாடத்தில், ‘சீற’ என்பதன் குறுக்கல் விகாரமென்னவேண்டும். நாதனமாகின்ற நகர் - இத்திருப்பதி ‘நாதன் கோயில்’ என்றும் வழங்கப்படுதல் உணர்க. ‘நந்தி’ என்னு மோரரசன் பணிவிடைகள் செய்யப் பெற்ற நகரமென்பது பற்றி ‘நந்திபுரவிண்ணகரம்’ எனத்திருநாம மாயிற்றென்ப. மேல் ஏழாம்பாட்டில் “நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகர நண்ணுமனமே!” என்றது காண்க.

English Translation

Sanctified Earth and the Fire and the waters and Air and the sky above, -all these are he, perfectly blending a consciousness with life and three states of waking and sleeping and dream. Fearing her anger he stole the butter and the curds in pots his mother patiently made. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்