விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
    ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 
    தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
    வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊன் அமர் தலை ஒன்று - மாம்ஸம் நிறைந்ததொரு பிரமகபாலத்தை
ஏந்தி - கையில் தரித்துக்கொண்டு
உலகு எல்லாம் - எல்லாலோகங்களிலும்
திரியும - (பிச்சையெடுத்துத்) திரிந்துகொண்டிருந்த
ஈசன் - ருத்ரனானவன்

விளக்க உரை

ஈனமர்சாபம் - கண்டவர்களடங்கலும் ‘இவன் பிரமஹத்திக்காரன்’ என்று பழிக்கு படியாகவுள்ள பாவம் என்றவாறு. ‘ஹீநம்’ என்ற வடசொல் ‘ஈன்’ எனச்சிதைந்தது.

English Translation

The god Siva, with a skull for a begging bowl, came seeking redemption. The Lord filled his skull-bowl with sap of his heart and freed him from the curse. He resides amid nectared! graves and fertile fields in Ten, Tirupper, How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்