2 எண்ணிக்கை பாடல் பாட

நிதியினை பவளத் தூணை*  நெறிமையால் நினைய வல்லார்,* 
கதியினை கஞ்சன் மாளக்*  கண்டுமுன் அண்டம்ஆளும்,*
மதியினை மாலை வாழ்த்தி*  வணங்கிஎன் மனத்து வந்த,* 
விதியினைக் கண்டு கொண்ட*  தொண்டனேன் விடுகிலேனே (2)

பிண்டியார் மண்டை ஏந்தி*  பிறர்மனை திரிதந்துஉண்ணும்- 
உண்டியான்*  சாபம் தீர்த்த  ஒருவன்ஊர்,*  உலகம் ஏத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம்*  கச்சிபேர் மல்லை என்று- 
மண்டினார்,*  உய்யல் அல்லால்*  மற்றையார்க்கு உய்யல்ஆமே? (2)      

வானவர் தங்கள் கோனும்*  மலர்மிசை அயனும்,*  நாளும்- 
தேமலர் தூவி ஏத்துவடிம்*  சேச் செங்கண் மாலை,* 
மானவேல் கலியன் சொன்ன*  வண்தமிழ் மாலை நாலைந்து,* 
ஊனம்அதுஇன்றி வல்லார்*  ஒளிவிசும்பு ஆள்வர் தாமே (2)