விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
    ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*
    கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
    நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா - பெரிதான;
அரங்கத்து - கோயிலிலே;
மணி ஆரமும் - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்;
ஓர் எழில் ஒப்பற்ற  - அழகையுடையதும்;
 
 

விளக்க உரை

பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும்உண்டவனும், பிரளய காலத்தில் நீரில் ஆலிலையில் துயில் கொண்டவனும், திருவரங்கத்திலேதிருவனந்தாழ்வான் மேல் சயனித்து இருப்பவனும், கௌஸ்துப மணியை அணிந்தவனுமான இந்த எம்பெருமானின் திருமேனி அழகு என் நெஞ்சினை நிறை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அதை (எம்பெருமானின்அழகினை) வெளிக்கொணரவே“ஐயோ” என்று சொல்லும் அளவிற்கு அழகானது என்கிறார்.

English Translation

He swallowed seven worlds and lay as a child on a fig leaf. He reclines on a serpent in Arangam. He wears a beautiful gem-set garland and a necklace of pearls on his dark frame. Aho, his matchless beauty has stolen my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்