விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்*  உள்ளடி பொறித்து அமைந்த* 
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்*  இலச்சினை பட நடந்து* 
    பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்*  பின்னையும் பெய்து பெய்து* 
    தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை*  தளர்நடை நடவானோ     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரு கார் கடல்வண்ணன் - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில் - ஒரு பாதத்திலே
சங்கு - சங்கமும்
ஒரு காலில் - மற்றொரு பாதத்தில்

விளக்க உரை

கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால் அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து. “கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும், காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம். இலச்சினை – லஷணம். கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான். இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும். தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

English Translation

The dark ocean-hued Lord, Kamadeva’s father, with the sole of his one foot etched with the conch-symbol and the other with the discus-symbol, leaves imprints wherever he places his foot, sending waves of lasting joy that rise over and over again, Is he come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்