விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அச்சம் நோயொடு அல்லல்*  பல்பிறப்பு அவாய மூப்புஇவை,* 
    வைத்த சிந்தை வைத்த ஆக்கை*  மாற்றி வானில் ஏற்றுவான்,*
    அச்சுதன் அனந்த கீர்த்தி*  ஆதி அந்தம் இல்லவன்,* 
    நச்சு நாகனைக் கிடந்த*  நாதன் வேத கீதனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவாயம் மூப்பு - அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு - பலவகைப் பிறப்புகளென்ன
இவை - ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை - இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை - கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தை

விளக்க உரை

யமனுக்கு வசப்பட்டு வருந்துகைக்கு ஹேதுவான பாபங்கள் போனாலும் மேன்மேலும் தேஹஸம்பந்தத்தைக் கொடுக்கவல்ல ப்ராப்தகருமம் கிடக்கவில்லையோவென்ன; அந்த ப்ராப்த கருமத்தையும் அதற்கு ஆச்ரயமான தேஹத்தையும் போக்கிப் பரமபதத்திலே நம்மை எம்பெருமான் கொண்டு போவானான பின்பு நம்பேற்றுக்கு ஒரு குறையில்லையெகிறார்.

English Translation

Fear, disease and despondence, birth and death and infirm age, the bonds of body and of heart, he cuts and takes us in the sky. The faultless one of endless fame without an end or origin, the Lord on poison serpent-bed is sung in all the Vedas-four.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்