விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
    நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
    வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
    கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாள் உவப்ப - வாழ்நாள் முடியும்படியாக
அன்று - முற்காலத்து
இலங்கை - லங்காபுரியை
சென்று - அடைந்து
நீறு செய்து - நீறாக்கி

விளக்க உரை

மேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்; “நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திருமகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு நாதம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார். “எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

English Translation

For the wrong of separating the consort Sita from her Lord, the terrible mighty Ravana did face the wrath of Rama-brave. He lost his kingdom and his life, now let the Lord of death, Yama think what may befall on him if he does take my life away!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்