விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுருக்குவாரை இன்றியே*  சுருங்கினாய் சுருங்கியும்,* 
    பெருக்குவாரை இன்றியே*  பெருக்கமெய்து பெற்றியோய்,*  
    செருக்குவார்கள் தீக்குணங்கள்*  தீர்த்ததேவ தேவன்என்று,* 
    இருக்குவாய் முனிக்கணங்கள்*  ஏத்த யானும் ஏத்தினேன்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெருக்கம் எய்து - (த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய் - பெற்ற பெருமானே
செருக்குவார்கள் - அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள் - அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த - தொலைத்தருளின

விளக்க உரை

எம்பெருமானே! உன்னுடைய வடிவழகு, திருக்கல்யாணகுணங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலியவற்றைப்பற்றி நான் பேசுவதெல்லாம் நானாகவே கண்டறிந்து பேசுவதல்ல, சிற்றறிவினனாகிய எனக்கு ஒன்றும் தெரியாது. வைதீக புருஷர்கள் ஸ்தோத்ரம் பண்ண ககண்டு காணும், அநுவாதரூபமாக ஏதோ பேசினே னுத்தனை என்று ஸநச்யானுஸந்தாநம் பணிக்கொள்ளுகிறார். “எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும் அப்படியானுஞ் சொன்னேன், அடியேன் மாற்றியாதென்பனே” (திருவிருத்தம்) “இரைத்து நல்ல மேன்மக்களேத்த யானுமேத்தினேன்” (திருவாய்மொழி.) என்ற நம்மாழ்வாரருளிச் செயல்களுங் காண்க.

English Translation

Without a means of growing small you shrunk yourself to manikin. Without a means of growing tall, you blew yourself beyond the world. The evil of oppressors all, - you rid the world, O Lord of gods. Since Vedic seers are full of praise, I too did sing in praise of you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்