விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
    படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 
    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சங்கிலிகை தொடர் - இரும்புச்சங்கிலியின் தொடர்பு
சலார்பிலார் என்ன - ’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு - தொங்குகின்றனவும்
பொன் - பொன்கயிற்றிற்கட்டியிருப்பனவுமான-
மணி - மணிகள்

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்; யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும், பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும், மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம். சலார்பிலார்-ஒலிக்குறிப்பு. மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக; கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம். வாரணம்- வடசொல். உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச்சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலேசேர்ந்து இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம். இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று. சார்ங்கபாணி-வடசொற்றொடர். தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.

உரை:2

 

 
 
எந்த யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது. ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும் ன்னு எல்லார்க்கும் தெரியும். அதனால முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுருப்பாங்க. கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால் அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல தூங்கு பொன்மணியொலிப்ப, உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க - கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப, அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்பரிக்க, இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல் பெருமளவு சத்தம் உண்டாக்க தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து, சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கமாட்டாயோ.

English Translation

Jaunting like a rutted elephant with the clangour of chains and the chime of hanging bells, ichor oozing in three spots, will no my Lord Sarangapani come toddling? His waist-bells peeling, his ankle-bells joining in the din, is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்