விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறப்பினோடு பேர்இடர்ச்*  சுழிக்கண் நின்றும் நீங்கும்அஃது,* 
    இறப்ப வைத்த ஞான நீசரைக்*  கரைக் கொடுஏற்றுமா,* 
    பெறற்குஅரிய நின்னபாத*  பத்திஆன பாசனம்,* 
    பெறற்குஅரிய மாயனே!*  எனக்கு நல்க வேண்டுமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீங்கும் அஃது - நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த - மறந்தொழிந்த
ஞான நீசரை - ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு - ஏற்றம் ஆ
பெறற்கு அரிய - துர்லபமான

விளக்க உரை

‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘அழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே; அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன; அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார். தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல; அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது; அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார். அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது; அதனைக்கொண்டு பலநீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.

English Translation

Standing in the vortex of a painful life of birth and death, the feeble minded suffering souls can find a way to reach the shore, by holding on to Holy Feet with cords of faith unshakeable. O Lord in high and hard to get, you must begin to help me now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்