விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடக்குஅரும் புலன்கள்*  ஐந்துஅடக்கி ஆசையாம் அவை,* 
    தொடக்குஅறுத்து வந்து நின்*  தொழிற்கண் நின்ற என்னைநீ,*
    விடக்கருதி மெய்செயாது*  மிக்குஒர் ஆசை ஆக்கிலும்,* 
    கடற்கிடந்த நின்அலால் ஒர்*  கண்ணிலேன் எம் அண்ணலே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் அண்ணலே! - எம்பெருமானே!
அடக்க அரு - அடக்க முடியாத
ஐந்து புலன்கள் - பஞ்சேந்திரியங்களை
அடக்கி - பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை - விஷயந்தரப் பற்றுக்களை
 

விளக்க உரை

புறப்பண்டான விஷயங்களில் விருப்பத்தை விலக்கி உன்னளவில் அபிநிவேசத்தைப் பிறப்பித்து கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கும்படி அடியேனை இவ்வளவு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த நீதானே என்னை உபேக்ஷித்து விஷயாந்தர ப்ரவணானகக் கெட்டுப்போகும்படி ஒருகால் கைவிட்டபோதிலும் உன்னையொழிய வேறொரு கதி இல்லை யெனக்கு என்று தம்முடைய அத்யவ ஸாயத்தை அருளிச்செய்கிறார். ஆசார்யனுடைய நல்ல உபதேசங்களைக்கொண்டும் சாஸ்த்ர பரிசயத்தைக் கொண்டும் இந்திரியங்களை அடக்கப்பார்த்தால் அடக்கமுடியாத இவ்விந்திரியங்களை உன் திவ்யமங்கள விக்ரஹவலக்ஷண்யத்தைக் காட்டி ஈடுபடுத்தி விஷயாந்தாங்களில் போகாதபடி தகைந்து புருஷார்த்தங்களின் மேலெல்லையாகிய கைங்கர்ய ப்ரார்த்தனையிலேயே நிலைநிற்கும்படி உன் திருவருளுக்குப் பாத்திரமாøகி நின்ற என்னை நீ உபேக்ஷிப்பதாகத் திருவுள்ளம்பற்றி எனது உஜ்ஜீவ நக்குஷியை முட்டமுடியா நடத்தாமல் இன்னும் விஷயாந்தரங்களிலேயே ருசியைப் பிறப்பித்து உன்னைவிட்டு நீங்கும்படி நீ செய்தாயாகிலும் என் மனம் உன்னைவிட்டு நீங்காது என்றவாறு. “என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்தன்னை அகல்விக்க தானுங் கில்லாணினி” என்ற நம்மாழ்வாரைப்போல அருளிச் செய்கிறபடி. மெய்செயாது= என்னை உஜ்ஜிவிப்பிக்க வேணுமென்ற திருவுள்ளத்துடன் தொடங்கின க்ருஷிகளை மெய்யாகத் தலைகாட்டாமல் என்கை.

English Translation

I tamed the senses, haughty five; -- my heart was full of base desires. I weeded out them by the root, and came to serve your feet alone. If you decide to let me go, and fill my heart with more desires, O Lord who lies in Ocean-deep, I have no one to seek, but you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்