விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊனில் மேய ஆவி நீ*  உறக்கமோடு உணர்ச்சி நீ,* 
    ஆனில்மேய ஐந்தும் நீ*  அவற்றுள் நின்ற தூய்மை நீ,*
    வானினோடு மண்ணும் நீ*  வளங்கடற் பயனும் நீ,* 
    யானும் நீ அதுஅன்றி*  எம்பிரானும் நீ இராமனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானினோடு மண்ணும் நீ - நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ - அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ - அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி - இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ - ஸர்வேச்வரனும் நீ காண்.

விளக்க உரை

எம்பெருமான் ஸர்வப்ரகாரி என்னுமிடத்தை யருளிச்செய்கிறார். உறக்கமோடு உணர்ச்சி நீ = தமோகுணத்தின் காரியமான உறக்கமும் ஸத்வகுணத்தின் காரியமான புத்திய விகாஸமும் நீயிட்ட வழக்கு; சிலர் விஷயாந்தா ப்ரவணராய் அறிவுகேடராய்க் கிடப்பதும், சிலர் உன்பாதமே பரவிப்பணிந்து கிடப்பதுமெல்லாம் நீ. ஸங்கல்பிக்கும் வகைகளேயா மென்றவாறு. வளங்கடற்பயனும்நீ = சிறந்த கடலிலுள்ள பயன்- அம்ருதம் ரத்னம் முதலியவை; அவையும் உன் ஸங்கல்பாதீநமென்றபடி, பிரயோஜநாந்தா, பரர்களான தேவர்களுக்குக் கடலினின்றும் அமுதமாகிற பிரயோஜநரந்தரத்தை யெடுத்துக் கொடுத்தருளினதுபோல் மற்றுள்ள பிரயோஜநாந்தர பரர்கட்கும் நீயே அப்பிரயோஜகங்களை அளிக்கவல்லை என்பது உட்கருத்தாம். (ஆனின்மேய இத்யாதி.) சுத்தியை வினைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற பஞ்சகவ்யமும், அவற்றிலுண்டான பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது. ஊனின்மேய ஆலிநீ என்றது - சரீரம் நின்றிருப்பதும் நசித்துப் போவதும் உன்னுடைய இச்சா தீநமென்றபடி. வானினோடு மண்ணும் நீ என்றது- ஆலம்பநமற்ற ஆகாசத்திலே பலபல தேவதைகள் ஸஞ்சரிக்கிறதும், நீரிலேகிடக்கிற பூமியானது கரையாமல் ஸகலத்துக்கும் ஆதாரமாயிருப்பதும் உன்னாலே என்றபடி, யானும் நீ என்றது- எனக்கு உன்பக்கல் ருசி பிறவாதகாலத்திலும் எனக்கு நல்லமதியை யளித்து ருசியைப் பெருக்கினதும் நீயென்றபடி.

English Translation

You are the sleep and waking states, the life within the body-case, the five-delights of cow is you, the purity in them is you. The earth and sky and ocean-deep are you and all their wealth is you. My soul is you, my Master too is you my Lord O Sita-Ram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்