விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குலங்களாய ஈரிரண்டில்*  ஒன்றிலும் பிறந்திலேன்,* 
    நலங்களாய நற்கலைகள்*  நாலிலும் நவின்றிலேன்,* 
    புலன்கள் ஐந்தும் வென்றிலேன்*  பொறியிலேன் புனித,* நின்- 
    இலங்கு பாதம் அன்றி*  மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நவின்றிலேன் - பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும் - பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன் - ஜயிக்கவில்லை.
பொறியிலேன் - பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின் - உன்னுடைய

விளக்க உரை

கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார். ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே; அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று. ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில். ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது. ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்; சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும் விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்; இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்; ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்; ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும் “உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.

English Translation

Alas, I am not fortunate to hail from well-bred families. O Lord, I am not well-read in the culture of the Vedas-four I have not won over my Five, the sense-pleasures, O Holy One! The only source of life I have is life of service to your feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்