விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பத்தினோடு பத்துமாய்*  ஒர்ஏழினோடு ஒர்ஒன்பதாய்,* 
    பத்துநால் திசைக்கண் நின்ற*  நாடுபெற்ற நன்மையாய்,*
    பத்தின்ஆய தோற்றமோடு*  ஒர்ஆற்றல் மிக்க ஆதிபால்,* 
    பத்தராம் அவர்க்குஅலாது*  முத்தி முற்றல் ஆகுமே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
நாடு - லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற  - பெறக்கூடிய
நன்மை ஆய் - நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு - தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல்மிக்க - பொறுமையினாலே பூர்ணனான

விளக்க உரை

பத்து திக்குகளுக்கும் அவற்றுக்கு அத்யக்ஷர்களான தேவர்கள் பதின்மர்க்கும் நிர்வாஹகனாய்,ஸப்தஸ்வரங்களுக்கும் ஒன்பது நாட்டிய ரஸங்களுக்கும் நிர்வாஹகனாய், பதினான்கு வகைப்பட்ட உலகங்களி லுள்ளார்க்கு போக்யனாகைக்காக தசாவதாரங்கள் செய்தருளி அவ்வவதாரங்களில் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவங்களையெல்லாம் பொறுத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமான் திறத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்க்கல்லது மோக்ஷபலம் பக்குவமாகைக்கு வழியில்லை. பதினான்றிசைக் கண்நின்ற = பத்தோடு கூடிய நான்கு - பதினான்கு; திசை - ப்ரகாரம்; பதினான்கு வகையிலேயிருக்கிற நாடுகளாவன - சதுர்த்தச புவனங்கள். ஆகுபெயரால், நாட்டிலுள்ளவர்களெனப் பொருள்படும். அவர்கள் பெறும் ப்ரயோஜநமாகைக்காக- (அதாவது) பயன் பெற்றோமென்று களித்து அநுபவிப்பதற்காக; மீனோடாமை கேழலரி குறளாய் மூன்று பிராமனாய்த் தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்கிறபடியே தசாவதாரங்கள் செய்தருளின ஸர்வ ஜகத்தாரணபூதனனான எம்பெருமான் திறத்திலே நன்றியறிவுடையார்க்கன்றி மற்றையோர்க்கு மோக்ஷபலன் பக்குவமாக வழியில்லை. ஆற்றல் மிக்க - ஆற்றலாவது பொறுமை; ****** என்றபடி ஸம்ஸாரிகள் பலவகைகளிலே திரஸ்காரங்கள் பண்ணினாலும் அவற்றைக் கணிசியாது பொறுமை பாராட்டுபவனென்கை.

English Translation

The Lord who rules the Quarters eight, above, below and sixteen too, He rules the cosmos all around the four directions of the space. His ten Avataras on Earth are symbols of his love for us. The service to his feet above will surely set the spirit free.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்