விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எட்டும் எட்டும் எட்டுமாய்*  ஒர்ஏழும் ஏழும் ஏழுமாய்,* 
    எட்டும்மூன்றும் ஒன்றும்ஆகி*  நின்ற ஆதி தேவனை,*
    எட்டின்ஆய பேதமோடு*  இறைஞ்சிநின்று அவன்பெயர்,* 
    எட்டுஎழுத்தும் ஓதுவார்கள்*  வல்லர் வானம் ஆளவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற - த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை - பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று - ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும் - அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள் - அநுஸந்திக்குமவர்கள்

விளக்க உரை

எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு; கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து; மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி - ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே; அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. (ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது. எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி, இப்படிப்பட்ட ஸர்வஜகத்காரணபூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத் திரவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார். எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை. பேதம் - *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.

English Translation

The twenty four – the Principles, the first cause Lord is all of these and twelve, -- the Adityas as well. The dear devoted worshippers who prostrate at his lotus feet, and learn his name in eight letters are rulers of the sky above.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்