விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிந்தறிந்து வாமனன்*  அடியணை வணங்கினால்,*
    செறிந்தெழுந்த ஞானமோடு*  செல்வமும் சிறந்திடும்,*
    மறிந்தெழுந்த தெண்டிரையுள்*  மன்னுமாலை வாழ்த்தினால்,* 
    பறிந்தெழுந்து தீவினைகள்*  பற்றறுதல் பான்மையே..

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முதலாயிரம் - திருச்சந்தவிருத்தம்
வாமணன் - உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை - அடியிணைகளை
அறிந்து அறிந்து - உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால் - நமஸ்கரித்தால்

விளக்க உரை

பரமபுருஷனுடைய திருவுள்ளம்பற்றல்தானே மோக்ஷஸாதநமாகில் முமுக்ஷுலான அதிகாரி செய்ய வேண்டிய சூது ஒன்றுமில்லையோவெனில்; அவ்வெம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்குதலும் அவனது திருப்புகழ்களை வாயார வாழ்த்துதலும் இவனுக்குக் காலக்ஷேபமாகக் கடவது; இவற்றால் இவனுடைய பாவங்களை தொலைந்து நல்ல ஞானபக்திகள் தழைக்கும் என்கிறார். எம்பெருமான் தன்னுடமையைப் பெறுவதற்குத் தானே யாசகனாய் நிற்பவன் என்பதையும், அடியாரை ஆட்கொள்ளுமிடத்தில் வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் ஒரு ஸமமாகத் திருவடிகளை வைத்து ஆட்படுத்திக் கொள்பவன் என்பதையும் சாஸ்த்ர ச்ரவணைத்தாலும் ஆசார்ய உபதேசத்தாலும் நன்கு தெரிந்துகொண்டு அத்திருவடிகளை வணங்கினால் ஞான ஸம்பத்தும் பக்தி ஸம்பத்தும் குறைவின்றி உண்டாகும்; திருப்பாற் கடலிலே துயில்கின்ற அப்பெருமானுடைய திருநாமங்களை வாயாலே சொன்னால் அவனைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களாயுள்ள பாவங்கள் அவலீலையாக அற்றொழியும் என்கை. பான்மை- இயற்கை; பாவங்களை ப்ரயானப்பட்டுப் போக்கினதுபோலாகாமே தன்னடையே போனதாகப் போமென்றபடி.

English Translation

For those who worship Vamana through knowledge and through learning him, the wisdom of a wakened one and wealth of all the world betide. For those who praise the Lord above who lies reclining in the sea, the bondage of the Karmic past will break with ease and leave the soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்