விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மரம்பொதச் சரந்துரந்து*  வாலிவீழ முன்னொர்நாள்,* 
  உரம்பொதச் சரந்துரந்த*  உம்பராளி எம்பிரான்,*
  வரம்குறிப்பில் வைத்தவர்க்கு*  அலாது வானம் ஆளிலும்,* 
  நிரம்புநீடு போகம் எத்திறத்ததும்*  யார்க்கும் இல்லையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சரம் துரந்து - அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ - வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத - அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த - பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான் - தேவாதி தேவனான எம்பெருமான்

விளக்க உரை

அந்தப் பரமபுருஷனை இராமபிரானாகத் திருவவதரித்தன னென்றுசொல்லி அந்த மஹாநுபாவனால் திருவுள்ளம்பற்றப்படாதவர்கள் உத்தமாதிகாரிகளாயிருந்தாலும் யத்ய ஸுகாநுபவத்திற்கு உரியரல்லர் என்கிறார். ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்ததுபோலவே வாலியின் மார்பையும் பாணத்தினால் துளைத்து அவனுயிரை மாய்த்த மஹாநுபாவனது திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்டவர்களுக்கன்றி மற்றெவர்க்கும் நித்யமான மோக்ஷத்தைப்பெற வழியில்லை. மூன்றாபடியில், அலாது = ‘அல்லது’ என்பது அலது எனத் தொக்கி நீட்டல் பெற்றது. வானம் ஆனிலும் = சிறந்த ஞானத்தையுடையராய்ப் பதினான்கு லோகங்கட்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாயிருந்தாலும் என்றபடி.

English Translation

The Lord of gods my Lord, in yore, he pierced an arrow through the trees and sent an arrow through the chest of Vali, king of monkey clan. For those who do not set their aim on him alone, who rules the sky, the joy of fullness can be known by no one and by no means here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்