விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆணினோடு பெண்ணும்ஆகி*  அல்லவோடு நல்லவாய்,* 
    ஊணொடுஓசை ஊறும்ஆகி*  ஒன்றுஅலாத மாயையாய்,* 
    பூணிபேணும் ஆயன்ஆகி*  பொய்யினோடு மெய்யுமாய்,* 
    காணிபேணும் மாணியாய்க்*  கரந்துசென்ற கள்வனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊணொடு ஓசை கூறும் ஆகி - ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய் - உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும் - பசுக்களை மேய்கிக்கிற
காணிப்பேணும் மாணி ஆய் - (மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி

விளக்க உரை

ப்ரஜைகளை அதிகப்படுத்தி லீலாவிபூதியை விஸ்தாரமாக்க வேணுமென்ற திருவுள்ளத்தினால் ஸ்த்ரீஜாதிகளையும் புருஷ ஜாதியையும் ஏராளமாகப் படைத்து அவற்றிலே தான் அந்தராத்மாவாய் நின்று பரஸ்பர ஸம்பந்தத்தை உண்டு பண்ணி இவ்வகையாலே நிர்வஹிக்கின்றான் என்ற கருத்து ஆணினோடு பெண்ணுமாகி என்பதற்கு, ஆனால் ஒன்றுக்கு முதவாத ... ஸகநுயாதிக்கு எம்பெருமான் நிர்வாஹகனல்லனோவென்ன, அதற்கும் இவனே நிர்வஹாகனென்கிறது அல்லவோடு என்று. அல்ல= ஸ்த்ரீஜாதியும் புருஷாஜாதியுமாகாதவை; அவையாவன- நபும்ஸகவ்யத்திகள். நல்லவாய்= நல்ல பார்த்தங்களாகையாவதென்னென்னில்; பகவத்கீதையில் பத்தாவது அத்யாயத்தில் ****** அதாவது- எந்த எந்த வஸ்துவானது செல்வம் மிக்கதாயும் அழகுமிக்கதாயும் நற்காரியங்களில் முயற்சிமிக்கதாயும் விளங்குகின்றதோ அவ்வப்பொருளெல்லாம் எனது தேஜஸ்ஸின் ஏகதேசத்தினுடைய இயைபுகொண்டதென அர்ஜுனே! நீ தெரிந்துகொள்! என்று அருளிச் செய்தபடி உலகத்திலுள்ள ஸர்வபதார்தங்களிலும் சிறப்பு பெற்றவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் மிக்க வீறுபெற்றிருக்குமென்கை. இதனால், ஹேமமானவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் இல்லையென்றபடி யல்ல; எல்லாவற்றிலும் ஸமாமாந்யமாகத் தோற்றமிருந்தாலும் சிறந்தவஸ்துக்களில் தோற்றம் அதிசயித்திருக்குமென்க. ஒன்றலாக மாயையாய் = ஒன்றலாத - ஒன்று அல்லாத; பலவாகப் பரிணமிக்கக்கூடிய என்றபடி, எல்லாப் பொருளுமாய்க்கொண்டு பரிணமிக்கக்கூடியது ப்ரக்ருதிதத்வமேயாகையாலும், ****** என்றபடி மாயையென்று ப்ரக்ருதிதத்வத்துக்குப் பேராகையாலும், ஸர்வவஸ்துவாயும் பரிணமிக்கவல்ல ப்ரக்ருதிதத்துவத்துக்கு நியாமகனானவனே! என்று பொருளுரைக்கப்பட்டது. அன்றியே, மாயை என்று ஆச்சர்யத்தையும், சொல்லுவதுண்டாதலால், ஒன்றிரண்டு வஸ்துக்களுக்குமாத்திரம் நிர்வாஹகையன்றிக்கே ஸகலப்தார்த்தங்களையும் சேதநனுடைய கர்மாநுகூலமாக நிர்வஹிக்கவல்ல ஆச்சர்யத்தையுடைவனே! என்றதாகவுமாம்.

English Translation

The male, female and genderless the gentle begins all, in all. The taste, the sound and all the five the sensations in sentients! You came as grazing cow herd lad, a blend of truth and falsity, to save the lotus world; you took the form of stealthy manikin!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்