விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரத்தினில் சிரத்தைமிக்க*  வாளெயிற்று மற்றவன்,* 
    உரத்தினில் கரத்தைவைத்து*  உகிர்த்தலத்தை ஊன்றினாய்,*
    இரத்த நீ இதென்னபொய்?*  இரந்தமண் வயிற்றுளே- 
    கரத்தி,*  உன் கருத்தை*  யாவர் காணவல்லர் கண்ணனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரத்தினில் - மார்விலே
கரத்தை வைத்து - திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை - நகரங்களை
ஊன்றினாய் - அழுத்திக் கொன்றாய்;
நீ - இப்படிப்பட்ட நீ

விளக்க உரை

அநந்யப்ரயோஜநனான (உன் அநுக்ரஹந்தவிர வேறொன்றையும் பயனாகக் கருதாதவனான) ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைக் கழித்தருளினாய் என்பது ஒருபுறமிருக்கட்டும்; ப்ரயோஜநாந்தரபரனான இந்திரனுக்காக யாசக வேஷம் பூண்டு வந்தாயே இதென்ன மாயம்? அவ்வளவேயோ? இந்திரனளவு ஆயிரமுக்யமுமில்லாமல் விமுகரான ஸம்ஸாரிகரீ... ப்ரளயாபத்திலே திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாயே, இதற்குத்தான் என்ன கருத்து? பாரமார்த்திகனான ஆச்ரிதனையும் க்ருத்ரிமனான ஆச்ரிதநாமத்தாரியையும் ராவண ஹிரண்யாதிகளின் வரிசையிலே கணக்கிடத்தக்க ஸம்ஸாரிகளையும் ஒரு ஸமயமாகக் காத்தருள்கின்ற உன்னுடைய உட்கருத்து என்ன? நீயே எனக்கருளிச் செய்ய வேணுமென்கிறார். நீ நரஸிம்ஹாவதார மெடுத்தவற்றைப் பார்த்தாலோ ‘அபார சக்தியக்தன்’ என்று தோன்றுகிறது; அடுத்தபடியாக, இந்திரனது வேண்டுகோளுக்கிணங்கி வாமநனாய் வந்து யாசகம் செய்தவாற்றைப் பாரத்தாலோ ‘அசந்தன்’ என்று தோற்றாநின்றது; ப்ரளயாபத்துக்கு உதவுந்தன்மையைப் பார்த்தாலோ ‘இவனுக்கு மேற்பட்ட ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனும் எவ்வுலகத்திலுமில்லை’ என்று என்னும்படியாயிருக்கிறது. இப்படி சக்தியையும் அசக்தியையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு நீ பலபலமாயச் செயல்கள் செய்வதற்குக் கருத்து எதுவோ? எனக்குத் தெரிய வருளிச் செய்யவேணுமென்கிறார்- என்றுங் கொள்ளலாம்.

English Translation

The great Asura Hiranya was puffed with pride of boons he had. You placed your hands on his bowels and sank your hard nails into him. You came to beg for three land steps and took the worlds and hid them all, now who can fathom this by mind?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்