விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூசமொன்றும் இன்றி*  மாசுணம்படுத்து வேலைநீர்,* 
    பேசநின்ற தேவர்வந்து*  பாட முன் கிடந்ததும்,*
    பாசம்நின்ற நீரில்வாழும்*  ஆமையான கேசவா,* 
    ஏச அன்று நீகிடந்தவாறு*  கூறு தேறவே,*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - அநாதிகாலமாக.
வேலைநீர் - ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி - சிறிதும் கூசாதே
மாகணம் - திருவனந்தாழ்வானை
படுத்து - படுக்கையாக விரித்து

விளக்க உரை

கூர்மாவதாக வ்ருத்தாந்தம் பின்னடிகளில் கூறப்படுகிறது. க்ஷீரஸாகரசயநம் பரத்வப்காசகமாயினும் ப்ரயோஜநாந்தாபர்களும் வந்து கிட்டித் துதிக்கலாம்படி எம்பெருமான் தன்னை அமைத்துக்கொண்டு கிடக்கிறபடியை நோக்கினவாறே “இப்படியும் ஒரு எளிமை உண்டோ?” என்று உள்குழையும்படி யிருந்தலாலும், ஆமையாய்ப்பிறந்த பிறவி எல்லார்க்கும் ஏசுகைக்கிடமாயிருந்தாலும் தேவதே வாதி தேவனான பரமபுருஷன் *** “பின் பிறப்பாய் ஒளிவரு முழுநலம்” இத்யாதிப்படியே தண்ணிய பிறவியிற் பிறந்த விடத்தும் பரத்வம் குன்றாமற் பொலியநிற்பதே! என்று ஈடுபடும்படியாயிருத்தலாலும், மற்றுள்ளார்க்குப் பரத்வம் தோன்றுமிடத்தில் எளிமையும், எளிமை தோன்றுமிடத்தில் பரத்வமும் இவ்வாழ்வார்க்குத் தோன்றாநின்ற தாய்த்து. எல்லா அவதாரங்களிலும் பரத்வஸௌலப்யங்கள் ஒன்றுக்கொன்று தோலாதே வீறு பெற்றிருக்குமென்பதுவே இப்பாட்டின் உள்ளுறை. ஸௌலப்யத்தோடு இணங்காத பரத்வமும், பரத்வத்தோடு இணங்காக ஸௌலப்யமும் ஒருபொருளாக மதிக்கத்தக்கவையல்ல வாகையால் இரண்டொடுங் கூடி நிற்கும் நிலையே மெச்சத்தக்காதென்க. பாசம் நின்ற நீரில்- ஜலராசிக்கு அதிஷ்டாக தேவதை வருணனாகையாலும், அவ்வருணனுக்குப் பாசம் ஆயுதமாகையாலும் “பாசம் நின்ற நீர்” எனப்பட்டது. “பாசன் நின்ற” என்றும் பாடமுண்டாம்; பாசன் =வருணன். இனி, “பாசம் நின்ற நீரில்” என்பதற்கு, “பரமபதத்திற்காட்டில் ப்ரேமஸ்தலாமன கடலிலே” என்றும் பொருள் அருளிச்செய்வர். பாசம் என்றது ஆசை; ‘பரமபத்திற்காட்டிலும் இந்த நீர்நிலமே நமக்கு போக்யமான இடம்’ என்று எம்பெருமான் ஆசைப்படத்தக்க நீர் என்றபடி.

English Translation

Without a care you lie alone on Serpent-bed in Ocean-deep, where gods in hordes do come to thee with praise and lasting Glory-be. O Kesava, the Lord of all, you came as turtle in the deep. Pray make it clear to us the way; you rose without a blame to thee?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்