விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடத்தவாய் ஓராயிரம்*  ஈராயிரம் கண் வெந்தழல்,* 
    விடத்து வீள்விலாத போகம்*  மிக்கசோதி தொக்கசீர்,*
    தொடுத்துமேல் விதானமாய*  பௌவநீர் அரவணை* 
    படுத்தபாயல் பள்ளிகொள்வது*  என்கொல் வேலை வண்ணணே!*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேலை வண்ணனே - கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த - விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய் - ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண் - ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல் - வெவ்விய தழலை

விளக்க உரை

கீழ் “நரசமூர்த்தி சயனமாய்” என்றும் “தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும் க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச்செய்கிறார். “விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால் “ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி. ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து. வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்- என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை. மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே; அதனைச் சொல்லுகிறது.

English Translation

The poison-spitting thousand hoods with fire-emitting eyes on each. In endless joy of union, the radiance so beautiful! The hoods do form a canopy, the body forms a couch to lie, O Lord of Ocean-hue, do tell, why do you lie thus in the sea?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்