விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தலைக் கணத்துகள் குழம்பு*  சாதிசோதி தோற்றமாய்,* 
    நிலைக்கணங்கள் காணவந்து*  நிற்றியேலும் நீடிருங்*
    கலைக்கணங்கள் சொற்பொருள்*  கருத்தினால் நினைக்கொணா,* 
    மலைக்கணங்கள் போலுணர்த்தும்*  மாட்சி நின்தன் மாட்சியே,*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தலைக்கணம் - முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள் - க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி - மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி - அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய் - திருவவதரித்து

விளக்க உரை

திருப்பாற்கடலில் நின்றும் தேவமதுஷ்பாதி யோநிகளிலே அவதரித்து ரக்ஷிப்பது மாத்திரமேயன்றி ஸ்தாவரபர்யந்தமான நால்வகை ஸ்ருஷ்டிகளிலும் அவதரித்து நீ உன்னை ஸர்வாநுபயோக்யனாக, ஆக்கினாலும் சாஸ்த்திரங்களானவை பரிச்சேதித்து அறியமாட்டாதபடியன்றே உன்னுடைய அவதார வைக்ஷைண்ய மிருப்பது என்கிறார். மநுஷ்யாதிகளுக்கு மேற்பட்ட தேவகணத்தைத் தலைக்கணமென்கிறது க்ஷுத்ரகணங்களாகிய ஸ்தாவராதிகளைத் துகள்கண மென்கிறது. மநுஷ்யகணங்களும் திர்யக்கணங்களும் குழம்பு சாதி யெனப்படும். தேவகணங்கள் புண்யயோநியாய், ஸ்தாவரங்கள் பரபயோநியாய் இருப்பதுபோன்றியே மநுஷ்ய திர்யக்ஜாதிகளிரண்டும் புண்யபாப மிச்ரயோநிகளாகையாலே குழம்புசாதி என்கை உசிதம்; ஆக இந்நான்கு யோநிகளிலும் *** என்றபடி அப்ராக்ருத திவ்யளம்ஸ்தாகத்தோதே பிறந்தருளினபடியைக் கூறுவது முதலடி. ஸ்தாவரஜாதியில் எம்பெருமான் பிறந்தனை யுண்டோவென்னில் உண்டு; கும்ஜாம்ரமாய் (-அதாவது சிறியதொரு மாமராய்)த் திருவவதரித்த வரலாறு புராண ப்ரஸித்தம். இப்படி திவவதரித்து, நிலைக்கண்கள் காணவந்து நிற்றியேலும் = தேவாதிகள் மாத்ரமில்லாமல் ஸ்தாவரங்களும்கூட உன்னை அநுபவிக்கும்படி நீ வந்து நின்றாயாகிலும், நிலைக் கணகங்கள் - அசையாமல் நிலைநிற்கும் ராசிகள், ஸ்தாவர ஸமூஹங்கள். நீ இப்படி தாழநின்றாலும் வேதம் முதலிய சாஸ்த்ரங்களானவை உன் வைபவத்தை ஒருபடியாலும் பரிச்சேதிக்கமாட்டாமல், பர்வத ஸமூகங்களை வர்ணிக்கப்புகுந்த வொருவன் அவற்றைப் பரிசேசதித்து வர்ணிக்கமாட்டாதே ஒரு ஸமுதாய ரூபேண வர்ணிக்குமாபோலே வர்ணிக்குமித்தனை யல்லது வேறில்லை யென்கிறார் நீடிருங் கலைக்கணகங்கள் இத்யாதியால். (கசு)

English Translation

The Devas and the sentient, the transient and all the forms on Earth in all the begins here, you dwell as a radiant spirit. The substance of the permanent, the Vedas cannot say it all, -- the heaps of Glory Mountain-like, the glories of thy holy feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்