விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கமாறும் வேதநான்கும்*  ஆகிநின்ற அவற்றுளே,*
    தங்குகின்ற தன்மையாய்!*  தடங்கடல் பணத்தலை,*
    செங்கண் நாகணைக் கிடந்த*  செல்வமல்கு சீரினாய்,*
    சங்கவண்ணம் அன்னமேனி*  சார்ங்கபாணி யல்லையே?*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்கம் ஆறும் - சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நாக்கும் - (அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆதி நின்று - ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய் - ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
ட கடல் - மஹா ஸமுத்திரத்திலே

விளக்க உரை

உரை:1

வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி, அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார். அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு. அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும், அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்; ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்; காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்; வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்: ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில் வைதிககருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும். இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை ஒன்றரையடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

உரை:2

நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் நிறைந்தவனே. பாற்கடலில் துயில்பவனே. கிருதயுகத்தில் சங்கினின் வெண்மை நிறம் கொண்ட நீ சாரங்கபாணியாய் இராமனாக வந்தாய் என்கிறார்.

English Translation

The truth in all the Vedas-four, the truth in all the six Angas! O, Truth hidden, you chose to live in ocean-deep in Yoga-sleep. The hooded snake with ruby eyes is couch for you, O Lord of wealth! Your frame is white as conch at first, when Sarnga bow is held by you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்