விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்னையென்று சொல்லலாவது*  இல்லையாதும் இட்டிடைப்*
    பின்னை கேள்வன் என்பர்  உன்*  பிணக்குணர்ந்த பெற்றியோர்*
    பின்னையாய கோலமோடு*  பேரும் ஊரும் ஆதியும்,*
    நின்னையார் நினைக்கவல்லர்*  நீர்மையால் நினைக்கிலே!*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்னை என்று - ‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது - சொல்லக்கூடியது
யாதும் இல்லை - ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் - உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும் - (விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்

விளக்க உரை

எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தையும் அவதாராக்ஷஸ்யங்களையும் அவன் தானே காட்டிக்கொடுக்கில் காணுமதொழிய ஸ்வப்ரயத்நத்தாலே ஆர்க்கும் காணமுடியாதென்கிறார். “ஆகியஞ்சோதியுருவை அங்கு வைத்திருங்குப்பிறந்த” என்றபடி தன்படிகளில் ஒன்றும் குறையாமெ எல்லாவற்றோடுங் கூடிவந்து திருவவதரித்து நிற்கிறநிலையிலே உன்படிகளில் ஏதாவதொருபடியையும் பரிச்சேதித்து அறிய முடியாதென்பது முதலடியின் கருத்து. உன்னாலே *மயர்வர மதிநல மருளப்பெற்ற உன் விஷயங்களை யெல்லாம் நன்கறிந்துள்ள மஹான்கள் “மிதுநமே ஆச்ரசணீயம்” (அதாவது பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை) என்று சொல்லுவார்கள்- என்பது இரண்டாமடியின் கருத்து. பிணக்காவது - “பேருமோருருவமும் உளதில்லை” என்று அநாச்ரிதர்கள் கூறுவதும், “பேருமோராயிரம் பிறபலவுடைய வெம்பெருமான்” என்று ஆச்ரிதர் கூறவதுமான இப்படிப்பட்ட விவாதம்: இதனையறிந்தவர்களென்றால், அநாச்ரிதர்கள் கூறுவது அஸம்பத்தமென்றும் ஆச்ரிதர்கள் கூறுவதே பொருத்தமுடைத்தென்றும் சோதித்தறிந்தவர்களென்கை. “பிள்ளையாயகோலம்” என்றது- இதர வ்யாவ்ருத்தமான விக்ரஹமென்றபடி. அன்றி, மானிடசாதிக்கும் ” பிற்பட்டதான் (ஹேயமான) திர்யக்காதி ஜாதியிலேயான திருமேனி யென்னவுமாம். “***- என்று கீதையிலே அறிவித்தாப்போலே நீறே அறிவிக்கில் அறியுமத்தனையொழிய மற்றைப்படியாக அறியமுடியாதென்பது ஈற்றடியின்கருத்து. இப்பாட்டின் முடிவில் நினைக்கிலே என்றவிடத்து அல்லது என்று கூட்டிக் கொள்ளவேணுமென்பர்.

English Translation

Nothing can be spoken of as “this is you”, and yet you are the slender waisted Pinnai’s spouse, so all the knowing ones do say. Then all the temples beautiful, with name and place and origin, do speak in easy terms about your glory on this Earth, Aho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்